குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது


குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2023 7:00 PM GMT (Updated: 1 Jun 2023 7:01 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குண்டர் சட்டம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா வாட்டாத்திக்கோட்டை கொள்ளுக்காடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் மணிராஜ் (வயது 25).

அதே பகுதி வெள்ளையன் தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் அய்யப்பன் (24). கும்பகோணம் தாலுகா பட்டீஸ்வரம் காமராஜர் சாலையை சேர்ந்தவர் ராஜூ மகன் குமார் (38). இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு பரிந்துரை செய்தார்.

மத்திய சிறையில் அடைப்பு

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா, கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, குண்டர் சட்டத்தில் மணிராஜ், அய்யப்பன், குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story