பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது


பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 14 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மகாசக்திநகரை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக நகர் கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன் ராமநாதபுரத்தில் இருந்து ரெகுநாதபுரத்திற்கு பஸ்சை ஓட்டி சென்றபோது ரெகுநாதபுரம் மின்வாரிய அலுவலகம் முன்பு சிலர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நின்றார்களாம். அந்த இடத்திற்கு சென்ற குமார் ஹாரன் அடித்து அவர்களை கண்டித்து விலக செய்துள்ளார். பின்னர் பஸ்சில் ரெகுநாதபுரம் சென்று பயணிகளை இறக்கிவிட்டு டீ குடித்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த கும்பல் டிரைவர் குமாரை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்களாம். இதில் படுகாயமடைந்து மயக்கமடைந்த குமாரை ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெகுநாதபுரம் மேலவலசை சூர்யா (24), அவரின் தம்பி சந்தோஷ் (19), சரண்ராஜ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story