கஞ்சா பயிரிட்ட 3 பேர் கைது
கிருஷ்ணகிரி அருகே கஞ்சா பயிரிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கஞ்சா விற்ற 6 பேர் சிக்கினர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே குள்ளன்கொட்டாய் ஊரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 75). இவர், நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டிருப்பதாக கே.ஆர்.பி. அணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது நிலத்தில் சோதனை செய்த போது 10 கிலோ கஞ்சா செடி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் லட்சுமணனை கைது செய்து கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இதேபோல கஞ்சா செடிகளை பயிரிட்ட பென்னங்கூர் சம்பத் (35), ஏழுமலையான் தொட்டி கோவிந்தன் (55) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதேபோல மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்ற பாலதொட்டனப்பள்ளி பூஞ்சோலை (45), பருவீதி மனோகரன் (50), வேடியப்பன் (50), ஜெகதேவி தேவபிரதாசா (49), கோவிந்தன் (50), நாயக்கனூர் குமரேசன் (70) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story