21 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது


21 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது
x

திருப்பதியில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்

கோயம்புத்தூர்

துடியலூர்

திருப்பதியில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா விற்பனை

கோவையை அடுத்த துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஞானராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திலக் உள்ளிட்ட போலீசார் வெள்ளக்கிணர் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சரவணம்பட்டியில் இருந்து வெள்ளக்கிணர் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர்.

3 பேர் கைது

உடனே போலீசார் விரைந்து செயல்பட்டு அவர்களை மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர்களிடம் 21 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.கஞ்சாவை கடத்தி வந்த விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையை சேர்ந்த காத்தாடி என்ற லக்குசாமி (வயது28), கூல் என்ற அஜித்குமார் (24), மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.2 லட்சம் பறிமுதல்

இவர்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கஞ்சாவை வாங்கி, கோவைக்கு கடத்திகொண்டு வந்து விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் வரும் வழியிலேயே கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதில், லக்குசாமி, அஜித்குமார் ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன், சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.


Next Story