துணிக்கடை ஊழியரிடம் கத்தி முனையில் செல்போன் பறித்த 3 பேர் கைது

துணிக்கடை ஊழியரிடம் கத்தி முனையில் செல்போன் பறித்த 3 பேர் கைது
கோவை
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிகிப்ஹரா சாகர் (வயது 22). இவர் ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக செல்போனில் பேசியபடி பாப்பாநயக்கன்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் அங்குள்ள பெருமாள் கோவில் எதிரே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து பிகிப்ஹரா சாகர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கத்திமுனையில் துணிக்கடை ஊழியரிடம் செல்போனை பறித்து சென்றது தென்காசி மாவட்டம் புலியங்குடியை சேர்ந்த டிரைவர் ஆகாஸ் குமார் (25), காந்திபுரத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (23), திருநெல்வேலி மாவட்டம் நாராணபுரத்தை சேர்ந்த வன்னியராஜ் (24) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






