சிதம்பரம் பஸ் நிலையத்தில் வாலிபரிடம் பணம், செல்போன் பறித்த 3 பேர் கைது
சிதம்பரம் பஸ் நிலையத்தில் வாலிபரிடம் பணம், செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
கடலூர்
சிதம்பரம்,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உமாயால் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சக்திஅழகன் (வயது 28). இவர் நேற்று காலையில் சிதம்பரம் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிதம்பரம் ஓமகுளம் தாயம்மாள் நகரை சேர்ந்த சேகர் மகன் சுரேந்தர் (22), நாஞ்சலூர் மெயின் ரோட்டை சேர்ந்த ராமமூர்த்தி மகன் சந்துரு (23), நாஞ்சலூர் பகுதியை சேர்ந்த அன்புமணி (22) ஆகியோர் சக்தி அழகன் சட்டை பையில் இருந்த ரூ.100 மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதைபார்த்த சக பயணிகள் 3 பேரையும் பிடித்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்தர், சந்துரு, அன்புமணி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story