சாராயம் கடத்தல் டிரைவர் உள்பட 3 பேர் கைது


சாராயம் கடத்தல்  டிரைவர் உள்பட 3 பேர் கைது
x

கல்வராயன்மலையில் சாராயம் கடத்தல் டிரைவர் உள்பட 3 பேர் கைது கார் பறிமுதல்

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலையில் உள்ள மேல்முண்டியூர் வனப்பகுதியில் இருந்து பொட்டியம் வழியாக சாராயம் கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் பொட்டியம் கோட்டக்கரை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக 3 மர்ம நபர்கள் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது உள்ளே 5 லாரி டியூப்களில் 150 லிட்டர் சாராயம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த காரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்தவர்கள் மேல்முடியூர் நடுத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் பாக்யராஜ்(வயது26), கொட்டப்புத்தூர் மேல்தெரு ராமன் மகன் ஏழுமலை(28), மட்டப்பட்டு கிராமம் தீர்த்தன் மகன் டிரைவர் கலியமூர்த்தி(32) என்பதும், கல்வராயன்மலையில் இருந்து சாராயத்தை கடத்தி கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த சாராய வியாபாரியிடம் கொடுக்க சென்றபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் காருடன் 150 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story