மின்சாரம் பாய்ந்து 3 மாடுகள் சாவு


மின்சாரம் பாய்ந்து 3 மாடுகள் சாவு
x

மின்சாரம் பாய்ந்து 3 மாடுகள் செத்தன.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பாரை சேர்ந்தவர் சேகர்(வயது 53). இவர் பசு மாடுகளை வளர்த்து, பால் கறந்து வீடு, வீடாக விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான 2 கறவை மாடுகளும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஒரு கறவை மாடும் அப்பகுதியில் உள்ள விளை நிலையத்தில் மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் மின் கம்பிகள் அறுந்து கீழே கிடந்தன. அந்த கம்பிகள் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3 மாடுகளும் பரிதாபமாக செத்தன. நேற்று காலை மாடுகளை தேடிச்சென்ற உரிமையாளர்கள், அவை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.அந்த பகுதியில் சம்பா ஒருபோக நடவு பயிருக்காக நாற்றங்கால் உழவு ஓட்டியுள்ளனர். மேலும் அந்த பகுதியில் தற்போது விவசாயப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், விவசாயிகளும் சென்று வருகின்றனர். மின்கம்பிகள் அறுந்து கிடந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக விவசாயிகள் உயிர் தப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story