விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி - பொதுமக்கள் போராட்டம்


விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி - பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 May 2023 10:46 AM IST (Updated: 14 May 2023 11:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளச்சாரயம் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story