3 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன


3 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

3 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கே.ஆர்.ஜி.பி. நகர், சுப்பையன் நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக 5 தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிந்து வந்தன. அவைகளுக்கு, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உணவு அளித்து செல்லமாக வளர்த்து வந்தனர். அந்த வழியாக செல்லும் யாரையும் அந்த நாய்கள் தொந்தரவு செய்யாது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம ஆசாமிகள் அந்த நாய்களுக்கு விஷம் கலந்த உணவை வைத்து உள்ளனர். இதை அறியாத 3 நாய்கள் உணவை தின்றன. இதனால் காலையில் ஆங்காங்கே இறந்து கிடந்தன. இதை பார்த்து பொதுமக்கள் கண் கலக்கினர். அந்த உணவை தின்னாத 2 நாய்கள் மட்டும் உயிர் தப்பின. தனது நண்பர்கள் இல்லாததை எண்ணி உயிர் பிழைத்த 2 நாய்களும் ஒரு மரத்தடியில் காலையில் இருந்து மாலை வரை படுத்து கிடந்தன. இறந்த நாய்களின் உடல்களை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றினர். இதனால் நாய்களை விஷம் வைத்து கொன்ற மர்ம ஆசாமிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story