'மிக்ஜம்' புயல் எதிரொலி சென்னையில் 3 விமானங்கள் ரத்து


மிக்ஜம் புயல் எதிரொலி சென்னையில் 3 விமானங்கள் ரத்து
x

வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மீனம்பாக்கம்,

வங்கக்கடலில் உருவாகி உள்ள 'மிக்ஜம்' புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் துபாய், சிங்கப்பூர், சார்ஜா, மும்பை, அந்தமான், ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா, சீரடி, பெங்களூரூ உள்பட 30 புறப்பாடு விமானங்கள் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து 3 மணிநேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.

மேலும் கன மழை பெய்யக்கூடும் என்பதால் பயணிகள், விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு நேரங்களை அறிந்து அதற்கு ஏற்ப தங்கள் பயணத்தை மாற்றி கொள்ளுமாறு விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story