நாயக்கனேரி ஊராட்சியில் நடைபெற்ற தேர்தலில் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி


நாயக்கனேரி ஊராட்சியில் நடைபெற்ற தேர்தலில்  3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி
x

நாயக்கனேரி ஊராட்சியில் நடைபெற்ற தேர்தலில் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

நாயக்கனேரி ஊராட்சியில் நடைபெற்ற தேர்தலில் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்தில் உள்ள 24-வது வார்டு மற்றும் நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள 8 மற்றும் 9 ஆகிய வார்டு உறுப்பினர் பதவிக்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று மாதனூர் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலருமான அப்துல்கலீல் தலைமையில் காலை 8 மணி அளவில் தொடங்கியது.

ஒன்றிய குழு வார்டு எண் 24-ல் போட்டியிட்ட அ.தி.மு.க. ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் எம்.இந்துமதி 1,345 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி 837 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 168 வாக்குகள் செல்லாதவை. நாயக்கனேரி ஊராட்சி வார்டு எண் 8 மற்றும் 9 ஆகிய வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க. ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் கே.நதியா மற்றும் பி.சுசீலா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

நாயக்கனேரி ஊராட்சியில் 14 மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராமத்தில் உள்ள 9 ஊராட்சி வார்டுகளில் 8,9 ஆகிய வார்டுகளில் மட்டும் 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மனு தாக்கல் செய்தனர். மீதம் உள்ள 7 வார்டுகளில் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அந்த வார்டுகளுக்கு தேர்தல் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story