மோட்டார்சைக்கிள் விபத்தில் 3 பேர் காயம்


மோட்டார்சைக்கிள் விபத்தில் 3 பேர் காயம்
x

மோட்டார்சைக்கிள் விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

மோட்டார்சைக்கிள் விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 60) என்பவர் ஆரணி செல்லும் ரோட்டில் உள்ள அவரது மாட்டுக்கொட்டகைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போதுள அரியபாடி கிராமத்தைச் சேர்ந்த கோபி (26) என்பவர் அவரது தாத்தா முத்துவுடன் (81) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வெங்கடேசன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் வெங்கடேசன் மற்றும் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.========


Next Story