சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்


சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்
x

சேலம் வழியாக கேரளா சென்ற ரெயிலில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் ரெயில்வே போலீசார் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்துவதை தடுக்கும் வகையில் ரெயில்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி நேற்று அதிகாலை ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து சேலம் வழியாக கேரளா சென்ற தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 13351) ரெயில்வே போலீசார் பாலமுருகன், கண்ணன், அசோக்குமார், சக்திவேல் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது முன்பதிவில்லா பெட்டியில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதை போலீசார் திறந்து பார்த்த போது, அதில் 3 பண்டல்களில் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பறிமுதல் செய்த போலீசார் அதை கடத்தி சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story