3 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


3 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Jun 2023 1:30 AM IST (Updated: 11 Jun 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் பேக்கரி மற்றும் வணிக வளாகத்தில்(சூப்பர் மார்க்கெட்) தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருவதாக புகார் வந்தது. கலெக்டர் அம்ரித் உத்தரவின்பேரில், தாசில்தார் காயத்ரி தலைமையில் துணை தாசில்தார் சதிஷ் நாயக், வருவாய் ஆய்வாளர்கள் அருண்குமார், சகுந்தலை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட பேக்கரி மற்றும் வணிக வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா?, விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளதா? என சோதனை மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து வணிக வளாக உரிமையாளருக்கு ரூ.60 ஆயிரம், பேக்கரி உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், 120 குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story