21 பயணிகளிடம் இருந்து 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்


21 பயணிகளிடம் இருந்து 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
x

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 21 பயணிகளிடம் இருந்து 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 21 பயணிகளிடம் இருந்து 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

பயணிகளிடம் சோதனை

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் மஸ்கட், ஓமன், துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானத்தில் பயணம் செய்பவர்கள் வியாபாரிகளாக வெளிநாடுகளுக்கு சென்று தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 11.30 மணி அளவில் துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்திவரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த சந்தேகப்படும் வகையில் உள்ள 39 பயணிகளிடம் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

3 கிலோ கடத்தல் தங்கம்

இதில் 21 பயணிகளிடமிருந்து சுமார் 3 கிலோ 150 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.1 கோடியே 73 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். இதுகுறித்து மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story