பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.3 லட்சம் நிதிஉதவி


பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.3 லட்சம் நிதிஉதவி
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1956-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த மாணவர் இன்பவாழ்வு (வயது 75), அமெரிக்காவில் இதய டாக்டராக பணியாற்றி வந்தார். அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக அவர் இறந்து விட்டார். அவர் இறப்பதற்கு முன்பு தனது மனைவியிடம், தான் படித்த பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும் என்று கூறினார். இதனை நிறைவேற்றும் வகையில் பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு, தற்போது பழுதடைந்துள்ள பழைய கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.3 லட்சம் நிதிஉதவி வழங்கப்பட்டது. இந்த தொகைக்கான காசோலையை நஞ்சையா பொன்னம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் தியாகராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கிராம கல்வி குழு தலைவர் மலர்விழி பிரதாபன், மூத்த ஆசிரியர் முனியப்பன், உதவி தலைமை ஆசிரியர் லட்சுமணன், உடற்கல்வி ஆசிரியர் வீரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story