ஆழியாறு அணையில் 3 லட்சம் மீன்குஞ்சுகள் விட இலக்கு


ஆழியாறு அணையில் 3 லட்சம் மீன்குஞ்சுகள் விட இலக்கு
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு அணையில் 3 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி


ஆழியாறு அணையில் 3 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆழியார் அணை


பொள்ளாச்சி அருகே ஆழியாறு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் நுண் மீன் வளர்ப்பு பண்ணை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு மணிமுத்தாறு, மேட்டூர், பவானியில் இருந்து நுண் மீன் குஞ்சுகள் வாங்கி வந்து வளர்க்கப்படுகிறது. அதற்கு கடலை புண்ணாக்கு, நெல் தவிடு ஆகியவை உணவாக கொடுக்கப்படுகிறது.


அந்த மீன்கள் 10 செ.மீ. வளர்ந்ததும் ஆழியாறு உள்ளிட்ட அணைகளில் இருப்பு வைக்க வழங்கப்படுகிறது. அங்கு, மீன் குஞ்சுகள் வளர்ந்த பிறகு பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


மீன்கள் விடப்பட்டன


இந்த நிலையில் மீன் குஞ்சுகளை அணையில் விட்டு இருப்பு வைக்க மீன் வளர்ச்சி கழகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி மீன் குஞ்சுகளை அணைக்குள் விடும் பணி தொடங்கியது. ஆழியாறு மீன் வளர்ச்சி கழக மேலாளர் சுகுமார், துணை மேலாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலையில் மீன் குஞ்சுகள் ஆழியார் அணையில் விடப்பட்டன.


இது குறித்து மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் கூறியதாவது:-


பவானி, மேட்டூர், மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் உள்ள தாய் மீன்கள் பண்ணையில் இருந்து மிர்கால், கட்லா, ரோகு ஆகிய நுண் மீன் குஞ்சுகள் கொண்டு வரப்பட்டு வளர்க்கப்படுகின்றன. தற்போது அவற்றை அணையில் இருப்பு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


3 லட்சம் குஞ்சுகள்


அணையில் சுமார் 3 லட்சம் மீன் குஞ்சுகளை விடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு 84 ஆயிரம் மீன் குஞ்சுகள் அணையில் விடப்பட் டன. தற்போது மீண்டும் 90 ஆயிரம் கட்லா, 49 ஆயிரம் மிருகால் மீன் குஞ்சுகள் விடப்பட்டு உள்ளன.


60 நாட்களுக்கு பிறகு ஒரு கிலோ எடை அளவு வளர்ந்த மீன்களை பிடித்து மீன் வளர்ச்சி துறை மூலமாக பொதுமக்களின் உணவு தேவைக்கு வினியோகம் செய்யப்படும். மீன் வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் குஞ்சுகளை வாங்கி கொள்ளலாம். விவசாய பண்ணை, குட்டை, சிமெண்ட் தொட்டியில் மீன்களை வளர்க்க லாம். ஒரு மீன் குஞ்சு ரூ.2-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story