சாராயம் கடத்திய 3 பேர் கைது


சாராயம் கடத்திய 3 பேர் கைது
x

சாராயம் கடத்திய 3 பேர் கைது

நாகப்பட்டினம்

திட்டச்சேரி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள்களை மறித்து போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளில் 110 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒரத்தூர் வடக்கு தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் அன்பரசன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அஜய் (20) ஆகியோர் என்பதும், அவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இதே போல் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல் படியும் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். நாகூர் வெட்டாற்று பாலம் அருகில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த ஸ்கூட்டரில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மஞ்சக்கொல்லை பூங்காளம்மன் தெருவை சேர்ந்த

முத்துகுமார் (வயது43) என்பதும், சாராயம் கடத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தி வரப்பட்ட 110 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும் முத்துகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story