திட்டச்சேரி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து 3 உறுப்பினர்கள் வெளிநடப்பு


திட்டச்சேரி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து 3 உறுப்பினர்கள் வெளிநடப்பு
x

சொத்துவரி உயர்வு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டச்சேரி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து 3 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

பேரூராட்சிகள் உள்ளிட்ட நகர்புறங்களில் உள்ள குடியிருப்பு, வணிக கட்டிடங்கள் மற்றும் காலிமனைகளுக்கான சொத்துவரியினை 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தி அரசாணை பிறப்பித்தது. அரசு அறிவித்த வரி உயர்வை இறுதி செய்து மன்ற அனுமதிக்காக திட்டச்சேரி பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் செய்யது ரியாசுதீன் பேசுகையில், சொத்து வரி உயர்வு மக்களை பாதிக்கும். சொத்து வரி உயர்வு தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக கூறி கூட்டத்தில் இருந்த வெளியேறினார். இதேபோல் சுயேச்சை உறுப்பினர் ஷேக்அப்துல் பாசித், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் சுல்தான் ரிதாவுதீன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.


Next Story