அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா
அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று அரியலூர் வட்டாரத்தில் 2 பேரும், செந்துறை வட்டாரத்தில் ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 9 பேரில், 5 பேர் மருத்துவமனையிலும், 4 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. ஆனால் பெரம்பலூர் மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தொடர்ந்து திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story