இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் 3 பேர் கைது
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்
வேப்பந்தட்டை:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக போலீசார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கை.களத்தூர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் வெள்ளுவாடி அறிவழகன், மாவட்ட குழு உறுப்பினர் சடையன் ஆகிய 3 பேரை கை.களத்தூர் போலீசார் நேற்று காலை கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story