பெண்ணிடம் நகை மோசடி; 3 பேர் கைது


பெண்ணிடம் நகை மோசடி; 3 பேர் கைது
x

மல்லூர் அருகே பெண்ணிடம் நகை மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

பனமரத்துப்பட்டி

மல்லூர் அருகே உள்ள ஒண்டியூர் லட்சுமி தாரணி நகரை சேர்ந்தவர் பிரேமலதா (வயது 33). இவர் அம்மாபேட்டையில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் அழகு கலை நிபுணராக வேலை செய்து வருகிறார். இவர் தனது கணவர் மற்றும் இரு மகள்களை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு தாரமங்கலம் துட்டம்பட்டி பகுதியை சேர்ந்த காளியப்பன் (55) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி காளியப்பனை, பிரேமலதா தனது வீட்டிற்கு வர சொல்லி உள்ளார். இதனையடுத்து காளியப்பன் தனது நண்பர்களான தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த ரகுபதி (37), சசிகுமார் (47) ஆகியோருடன் பிரேமலதா வீட்டுக்கு சென்றார். தனக்கு பணம் தேவைப்பட்டதால் பிரேமலதா 4 பவுன் நகையை அடமானம் வைக்க காளியப்பனிடம் கொடுத்தார். நகையை வாங்கி சென்ற 3 பேரும் திரும்பி வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரேமலதா மல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி காளியப்பன், ரகுபதி, சசிகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 பவுன் நகை மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story