மதுவிற்ற 3 பேர் கைது


மதுவிற்ற 3 பேர் கைது
x

பள்ளிபாளையம் பகுதிகளில் மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் ஓடப்பள்ளி, சமயசங்கிலி, வசந்த நகர் ஆகிய பகுதிகளில் அரசு அனுமதி இன்றி மதுவிற்பனை செய்து கொண்டிருப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை ஒட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பள்ளிபாளையத்தை சேர்ந்த கோபி (வயது 23), ஈஸ்வரன் (54), முருகேசன் (57) ஆகியோர் 3 இடங்களில் சாக்குப்பையில் மது பாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 240 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story