செங்கல் சூளைதொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது


செங்கல் சூளைதொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
x

எருமப்பட்டி அருகே செங்கல் சூளைதொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

எருமப்பட்டி

எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிப்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் கடந்த 4 ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருபவர் மித்திரன் (வயது 83). இவரது மகன் மகரஜோதி. இவர் ஈரோடு அருகே உள்ள வெட்டுக்காடு வலசு பகுதியை சேர்ந்த ஜெய்பிரதீப் (35) என்பவரிடம் ரூ.5 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் ரூ.4.50 லட்சத்தை மகரஜோதி திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை 2 நாட்களில் தருவதாக கூறியுள்ளார். இந்தநிலையில் ஜெய் பிரதீப், அதே ஊரைச் சேர்ந்த மதுபாலன் (60), சேலம் மாவட்டம் காடையாம்பட்டி நாச்சினம்பட்டியைச் சேர்ந்த விவேகராஜ் (33) ஆகியோரை அழைத்துக் கொண்டு மகரஜோதி தங்கி உள்ள பொட்டிரெட்டிப்பட்டி செங்கல் சூளைக்கு சென்றுள்ளார். பின்னர் மகரஜோதியை அவா்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து மித்திரன் எருமப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்பிரதீப், மதுபாலன், விவேகராஜ் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story