சாதி பெயரை கூறி தாக்கியதாக 3 பேர் கைது


சாதி பெயரை கூறி தாக்கியதாக 3 பேர் கைது
x

சாதி பெயரை கூறி தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

தா.பேட்டை:

தா.பேட்டையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள மளிகைக்கடையில், கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் (வயது 36) வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் வேலை செய்தபோது அழகாபுரி கிராமத்தை சேர்ந்த சிலர், அவரை முன்விரோதம் காரணமாக சாதி பெயரை கூறி தகாத வார்த்தைகளால் திட்டியும், இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த முருகானந்தம் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் தலைமையில், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குபதிந்து அழகாபுரி கிராமத்தை சேர்ந்த பிரபு என்ற பிரபாகரன்(30), ஹரிஹரன்(25), கோபி(23) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story