விவசாயியை தாக்கிய 3 பேர் கைது


விவசாயியை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள ராஜபாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி(வயது 68). விவசாயியான இவரது நிலத்தில் புதியதாக கிணறு வெட்டுவதற்காக அதே ஊரை சேர்ந்த மதி(58) என்பவரிடம் ஒப்பந்தம் செய்தார். ஆனால் கிணறு வெட்டும் பணியை மதி காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிணறு வெட்டும் பணியை மாரி வேறு நபருக்கு கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதி குடும்பத்தினர் மாரியை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாரி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதி, இவரது மகன்கள் அஜித்(32), வல்லரசு(20) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story