வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
வாலிபரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னவாசல் அருகே வீரபெருமாள்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). இவருக்கும் பரம்பூரை சேர்ந்த பாண்டியன் (19) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வயலோகம் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவிற்கு பிரகாஷ் மற்றும் அவரது உறவினர் அழகு பெருமாள் ஆகிய இருவரும் வந்துள்ளனர். வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது, பாண்டியன் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து பிரகாஷ், அழகுபெருமாளை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியன் மற்றும் 18 வயதுடைய 2 சிறுவர்கள் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.