விளம்பர பதாகையை சேதப்படுத்திய 3 பேர் கைது


விளம்பர பதாகையை சேதப்படுத்திய 3 பேர் கைது
x

விளம்பர பதாகையை சேதப்படுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

பொன்மலைப்பட்டி:

திருச்சி வரகனேரி பள்ளிபாளையம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அன்சாரி(வயது 24). இவர், ராஜகுமாரி என்பவரிடம் பணிபுரிந்து வருகிறார். ராஜகுமாரி மேல கல்கண்டார் கோட்டை ராஜீவ் காந்தி நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் நடத்தி வருகிறார். ராஜகுமாரியிடம் பணிபுரிந்த திருச்சி பால்பண்ணை ராமகிருஷ்ணா நகரை சேர்ந்த நிஜாம் என்கின்ற நைனாமுகமது, ஸ்ரீரங்கம் திருவானைக்கோவிலை சேர்ந்த பிரசாந்த், பாலக்கரை பீமநகர் பகுதியை சேர்ந்த பாரதி கண்ணன் ஆகிய 3 பேரையும் ராஜகுமாரி அவர்களின் நடவடிக்கை சரியில்லை என வேலையை விட்டு நிறுத்திவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அன்சாரி ராஜீவ் காந்தி நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரத்திற்கான விளம்பர பதாகையை அங்கே வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த நிஜாம் என்கின்ற நைனா முகமது, பிரசாந்த் மற்றும் பாரதி கண்ணன் ஆகிய 3 பேரும் வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் விளம்பர பதாகையை கிழித்து எரிந்துள்ளனர். இது குறித்து அன்சாரி பொன்மலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story