அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
x

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேைர போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பேர்நாயக்கன்பட்டியில் தகர செட் அமைத்து அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த கோட்டையூரை சேர்ந்த கணேஷ் (வயது 55), முத்து (35), தங்கப்பாண்டி (32) ஆகிய 3 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்களிடம் இருந்த 35 கிலோ சோல்சா வெடிகள், 8 குரோஸ் வெள்ளைத்திரி மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இந்த சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story