கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
x

விக்கிரமசிங்கபுரத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற கண்ணன் (வயது 32), விக்கிரமசிங்கபுரம் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்ற அஜித் (20), விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற கவுண்டமணி (29) ஆகியோர் ஒரு பள்ளிக்கூடம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சா, செல்போன்களை பறிமுதல் செய்தனர்.


Next Story