திண்டிவனம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


திண்டிவனம் பகுதியில்    கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம்

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மேற்பார்வையில் திண்டிவனம் உட்கோட்ட போலீசார் கஞ்சா, சாராயம், லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுவர்களை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று திண்டிவனம் ஒலக்கூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் நேற்று ஈச்சேரி ரோடு, சாரம் ஏரி, கலிங்கல் முட்புதர் அருகே கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 22), கிடங்கல்-2 பகுதியை சேர்ந்த அன்பழகன் (44) மற்றும் சாரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (வயது 23) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story