கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x

வருசநாடு அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்

தேனி

வருசநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் சிங்கராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்வராஜபுரம் பிரிவு அருகே கஞ்சா விற்ற மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்த சிங்கம் (வயது 28), மணிகண்டன் (19), சிங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்த சின்னச்சாமி (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சின்னச்சாமி மீது திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 8 கஞ்சா வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story