கஞ்சா விற்ற 3 பேர் கைது


கஞ்சா விற்ற 3 பேர் கைது
x

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக கரூர் டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கரூர்- திருச்சி சாலையில் காந்திகிராமம் அருகில் கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அலெக்சாண்டர்(வயது 22), வெங்கைக்கல்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற கல்லுமடையை சேர்ந்த அஜய் மோகன்குமார், சொக்காலியூர் பகுதியில் கஞ்சா விற்ற மதுரை அண்ணா நகரை சேர்ந்த கண்ணன்(25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story