லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் கைது


லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் கைது
x

லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக பல்வேறு புகார் வந்தன. இதன்பேரில் ஆலங்குடி போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கூழையன்காடு பஸ் நிறுத்தம் அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சேகர் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ.9,150 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. செம்பட்டிவிடுதி நால்ரோடு பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூக்கம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த முருகானந்தம் (45) என்பவரை செம்பட்டிவிடுதி போலீசார் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் அறந்தாங்கி வ.உ.சி. திடல் அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ரகமத்துல்லா (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story