கத்தியை காட்டி ெசல்போன்-மோட்டார் சைக்கிளை பறித்த 3 பேர் கைது


கத்தியை காட்டி ெசல்போன்-மோட்டார் சைக்கிளை பறித்த 3 பேர் கைது
x

கத்தியை காட்டி ெசல்போன்-மோட்டார் சைக்கிளை பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

துறையூர்:

செல்போன்-மோட்டார் சைக்கிள் பறிப்பு

துறையூரை அடுத்துள்ள புத்தனாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நித்திஷ்குமார்(வயது 21). கூலி ெதாழிலாளியான இவர் நேற்று புத்தனாம்பட்டியில் இருந்து எதுமலைக்கு சென்று எதுமலை உப்பாற்று பாலம் அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி, நித்திஷ்குமார் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோரிடம் இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செல்போன் மற்றும் ேமாட்டார் சைக்கிளை பறித்தவர்கள் முசிறி தண்டலைப்புத்தூரை சேர்ந்த சுரேஷ்(24), துறையூரை அடுத்த மருவத்தூரை சேர்ந்த சுரேஷ்குமார்(24) மற்றும் டி.புதுப்பட்டியை சேர்ந்த வினித்(21) மற்றும் வாத்தலையை சேர்ந்த வடிவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். வடிவேலை தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்றவர்கள் கைது

*ஸ்ரீரங்கம் போலீசார் ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்த நந்து (21), திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஜார்ஜ் (23), உறையூர் பகுதியைச் சேர்ந்த பூவிழி கண்ணன் (26) ஆகியோர் அந்த பகுதியில் கஞ்சா விற்றதாக ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா, 1 அரிவாள், ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 800 மற்றும் 5 பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*மணப்பாறையில் கஞ்சா விற்ற ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கேசவபாண்டியன்(20), அண்ணாவி நகரை சேர்ந்த வினோத் குமார்(20), காந்தி நகரை சேர்ந்த சிவனேசன்(57) உள்பட 4 பேரை மணப்பாறை போலீசார் கைது செய்தனர்.

*தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு இடையாத்தி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் திருச்சி-கரூர் பைபாஸ் ரோட்டில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது கடைக்கு அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 2 பேர் வந்தனர். அவர்கள் அன்பழகனின் சட்டை பையில் இருந்து ரூ.200-ஐ பறித்துக்கொண்டு ஓடினர். சுதாரித்துக்கொண்ட அன்பழகன் அந்த 16 வயது சிறுவனை கையும், களவுமாக பிடித்தார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பறித்தவர் கைது

* திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் அமுதவல்லி. இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனது தாயுடன் சிகிச்சைக்காக வந்திருந்தார். அப்போது நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த வைத்தி (23) என்பவர் அமுதவல்லியிடம் செல்போனை பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து வைத்தியை கைது செய்தனர்.

* திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (47). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் தனது குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கோணக்கரை ரெயில்வே கேட் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு மயங்கிய நிலையில் அவர் இறந்து கிடந்தார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story