குழாய்கள் திருடிய 3 பேர் கைது


குழாய்கள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2023 1:00 AM IST (Updated: 24 Feb 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:-

ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே ஜடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 43). விவசாயி. இவர், தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அங்கு 3 பேர், 400 மீட்டர் நீளம் கொண்ட குழாய்களை திருடிக் கொண்டிருந்தனர். இதை கவனித்த ஜெகநாதன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து கல்லாவி போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் மேட்டுசூளகரையை சேர்ந்த அறிவுமணி (29), சிதம்பரம் (33), பிரதாப் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story