நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் 3 பேர் கைது


நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் 3 பேர் கைது
x

நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள சின்னசூரியூர் பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.ஆர்.ரமேஷ் தரப்பிற்கும், திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த பப்ளு தரப்பிற்கும் இடையே சீட்டு விளையாடுவதில் பிரச்சினை இருந்துள்ளது. இது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 2 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தப்பி ஓடியவர்களை தேடிவந்த நிலையில், நேற்று உறையூர் மேல கல் நாயக்கன் தெருவை சேர்ந்த தர்மராஜின் மகன் விமல் (என்கிற) செல்வகுமார்(வயது27), பெரியமிளகுபாறையை சேர்ந்த ஆரோக்கியதாசின் மகன் ராஜி (என்கிற) ராஜேஷ்(35), எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த முருகேசனின் மகன் கலைவாணன்(30) ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story