குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நத்தம் அருகே உள்ள லிங்கவாடியில்2 மாதங்களுக்கு முன்பு உதயகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். அதில் லிங்கவாடியை சேர்ந்த நல்லியப்பன் (வயது 58), சிவம் என்ற பொன் நாட்டாண்மை (26) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் திண்டுக்கல் சிறையில் இருந்த 2 பேரையும் நத்தம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல் பழனி தாலுகா புது ஆயக்குடி வெள்ளிபாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (32). இவர் கொலை வழக்கில் பழனி தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை பழனி தாலுகா போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.