திருச்சி ரவுடி கொலை வழக்கில் 3 பேர் சிக்கினர்


திருச்சி ரவுடி கொலை வழக்கில் 3 பேர் சிக்கினர்
x

திருச்சி ரவுடி கொலை வழக்கில் 3 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

ரவுடி கொலை

திருச்சியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 31). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இளவரசன் கடந்த 12-ந் தேதி புதுக்கோட்டையில் ஒரு வழக்கு தொடர்பாக கையெழுத்து போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புதுக்கோட்டை புதுக்குளம் அருகே சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிள்களில் வந்து, அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச்சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 பேர் சிக்கினர்

கொலையான இளவரசன் மீது கொலை வழக்குகள் பல நிலுவையில் உள்ள நிலையில், பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதினர். சம்பவம் நடந்த இடம் அருகே மற்றும் நகரின் முக்கிய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரவுடி கொலையில் தொடர்புடைய 3 பேர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் ஒருவர் திருவாரூர், மற்றொருவர் திருச்சி, இன்னொருவர் மானாமதுரையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story