திருமங்கலம் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை
திருமங்கலம் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திருமங்கலம்
தூக்குப்போட்டு பெண் சாவு
திருமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் கருப்பையா.சலவை தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 55).கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்புலட்சுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த சுப்புலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சுப்புலட்சுமி உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
விவசாயி தற்கொலை
கள்ளிக்குடி அருகே உள்ள வேப்பங்குளத்தை சேர்ந்தவர் சேது (62).விவசாய கூலித்தொழிலாளி. குடும்பப் பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் உள்ளவர்கள் இவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சையில் இருந்த சேது சிகிச்சை பலனின்றி இறந்தார். கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மூதாட்டி
உசிலம்பட்டி அருகே உள்ள கள்ளப்பட்டியை சேர்ந்தவர் முனியம்மாள் (70). கணவர் இறந்ததை தொடர்ந்து தனியாக வசித்து வந்த அவர் பசுமாடுகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடுகளை குளிப்பாட்டும் போது, ஒரு மாடு முனியம்மாளின் காைல மிதித்து விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. வலி தொடர்ந்து இருந்ததால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.