வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் சாவு


வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் சாவு
x

வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் இறந்தனர்.

திருச்சி

தலைநசுங்கி சாவு

திருச்சி மாவட்டம், சமயபுரத்தை அடுத்த மேலவாளாடி அருகே உள்ள புதுகுடியை சேர்ந்தவர் மகாமுனி. இவரது மகன் பூஜைமணி என்ற மாதவன்(வயது 22). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இவர் நேற்று இரவு புதுக்குடியில் இருந்து கொள்ளிடம் நம்பர் ஒன் டோல்கேட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். மேலவாளாடியை அடுத்த பனையடியான் கோவில் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட பூஜைமணி தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு பூஜைமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர்- மூதாட்டி

இதேபோல் தா.பேட்டை சாராயகார தெரு பகுதியை சேர்ந்த தங்கவேலின் மனைவி மல்லிகா(65). இவர் மகாதேவி பகுதியில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக, உப்பாற்று பாலம் அருகே நடந்து வந்தபோது, அந்த வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடலை தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், வாத்தலை அருகே உள்ள கிளியநல்லூர் பகுதியை சேர்ந்த சேதுராமன்(88) ஒரு மோட்டார் சைக்கிளில் கிளியநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்து திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(48) மீது வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story