ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பலி


ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பலி
x

ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பலி

மதுரை

புதூர்

மதுரை மாவட்டத்தில் நடந்த ெவவ்வேறு விபத்துகளில் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

விபத்து

திருப்பரங்குன்றம் கோடாங்கி தோப்புத் தெருவை சேர்ந்தவர் மாரி(வயது 49). இவர் ஒலிபெருக்கி ஆபரேட்டர். இந்தநிலையில் மாரி நேற்று திருப்பரங்குன்றம் சன்னதி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஜி.எஸ்.டி. ரோட்டை கடக்க முயன்றார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தார். இந்த வாகனம் மாரி மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த மாரியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைபலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து திடீர்நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

திருமங்கலம் அருகே கள்ளிக்குடி தாலுகா நல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர்ரெட்டி(வயது 70). இவர் நேற்று நல்லமநாயக்கன்பட்டி விலக்கில் இருந்து ஊருக்கு செல்ல சாலையை கடந்துள்ளார். அப்போது திருமங்கலம் மம்சாபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன்(36) விருதுநகரில் இருந்து திருமங்கலம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்தார். இந்த வாகனம், சாலையை கடந்து சென்ற முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர்ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர்

மதுரை புதூர் சர்வேயர் காலனி அசின் நகரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 55). ஆட்டோ டிரைவர். இவர் அழகர்கோவில் மெயின்ரோட்டில் மருதங்குளத்தில் பயணியை இறக்கிவிட்டு சென்றார். அப்போது ஊமச்சிகுளம் ஆலத்தூரை சேர்ந்த அகமதுரஹீம் பாசில்(31) என்பவர் ஓட்டி வந்த கார், ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்து ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பாலை இன்ஸ்பெக்டர் எஸ்தர், போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story