ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் ராமேசுவரத்தில் கைது
துப்பாக்கி சண்டையில் தேடப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் ராமேசுவரத்தில் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
ராமேசுவரம்,
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்த துப்பாக்கி சண்டையில் தொடர்புடைய வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் ராமேசுவரத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி இருப்பதாக செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது. இதை தொடர்ந்து ஒடிசா போலீசார் ராமேசுவரம் வந்தனர். இங்குள்ள ராமேசுவரம் போலீசாரின் உதவியுடன் செல்போன் சிக்னல் காண்பித்த தனியார் விடுதிக்கு ஒடிசா போலீசார் சென்றனர்.
அங்கு தங்கி இருந்த 3 பேரை கைது செய்து ஒடிசாவுக்கு அழைத்துச்சென்றனர். இந்த சம்பவம் ராமேசுவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story