கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவிகளை தாக்கிய கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது


கள்ளக்குறிச்சி அருகே    பள்ளி மாணவிகளை தாக்கிய கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவிகளை தாக்கிய கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் 17 வயது மாணவி, 15 வயது மாணவி. அக்காள், தங்கையான இவர்கள் இருவரும் சங்கராபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் முறையே 12 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். சம்பவத்தன்று அக்காள், தங்கை இருவரும் பள்ளி சென்று விட்டு ஆலத்தூரில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலத்தூரை சேர்ந்த அய்யனார்(வயது 21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரும் சேர்ந்து அக்காள்-தங்கையை சாதி பெயரை கூறி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி தகவல் அறிந்து வந்து தனது சகோதரிகளை திட்டி, தாக்கியதை தட்டிக்கேட்ட மாணவிகளின் அண்ணனையும், அய்யனார் ஆதரவாளரான கள்ளக்குறிச்சி தனியார் கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. படிக்கும் 18 வயது சிறுவன் திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அய்யனார், 17 வயது சிறுவன், 18 வயது கல்லூரி மாணவர் ஆகிய 3 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story