கல்லூரி மாணவர் உள்பட 3 பேரிடம் பணம், செல்போன் பறிப்பு


கல்லூரி மாணவர் உள்பட 3 பேரிடம் பணம், செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை மிரட்டி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து மர்ம கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது.

கோயம்புத்தூர்

கோவையில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை மிரட்டி பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து மர்ம கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறது.

கல்லூரி மாணவர்

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவருடைய மகன் சந்துரு (வயது 19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் காலை கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.

பின்னர் அவர் நவ இந்தியா ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென்று வழிமறித்தனர்.

பின்னர் அவர் கள், சந்துருவை மிரட்டி செல்போன் மற்றும் ரூ.3 ஆயிரத்தை பறித்து விட்டு தப்பி சென்றனர். கல்லூரி மாணவரிடம் மர்ம நபர்கள் பணம், செல்போன் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணம், ஏ.டி.எம். கார்டு

கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் மதுசூதனன் (42). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன் தினம் அவினாசி ரோடு கோல்டுவின்ஸ் பகுதியில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த 3 பேர், மதுசூதன னை மிரட்டி செல்போன், ரூ.600, ஓட்டுநர் உரிமம், ஏ.டி.எம். கார்டு, அடையாள அட்டை ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

செல்போன் பறிப்பு

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (27). இவர் கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்றுமுன்தினம் தனது அறைக்கு செல்வதற்காக தண்ணீர் பந்தல் ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், முகவரி கேட்பது போல நடித்து கார்த்திகேயனிடம் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ோவையில் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் மர்ம நபர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

இது குறித்து போலீசார் கூறும்போது, ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வழிப்பறி சம்பவங்கள் நடந்து உள்ளது. இதில் 3 பேர் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் ஒரே கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.

எனவே சம்பவங்கள் நடந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். மேலும் அந்த கும்பல் பயன்படுத்திய வாகனங்களின் முகவரி மூலம் அந்த நபர்களை தேடி வருகிறோம் என்றனர்.


Next Story