ஆவின் பெண் ஊழியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்


ஆவின் பெண் ஊழியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாலின் தரம் குறைவாக இருந்தது தொடர்பாக ஆவின் நிறுவன பெண் ஊழியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

பாலின் தரம் குறைவாக இருந்தது தொடர்பாக ஆவின் நிறுவன பெண் ஊழியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பால் உற்பத்தி

கோவை பச்சாபாளையத்தில் ஆவின் பால் வினியோக மையம் உள்ளது. இங்கு தினமும் 3½ லட்சம் லிட்டர் பால், பாக்கெட்டுக ளில் தயார் செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது.

பாலின் தரம் குறித்து பதப்படுத்துதல் பிரிவில் தினமும் ஆய்வு செய்யப்படுகிறது. நேற்றும் பாலின் தரம் குறித்து தொழில்நுட்ப அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பதப்படுத்தல் பிரிவில், ஆவின் பாலின் தரம் சரியாக இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

3 பேர் பணியிடை நீக்கம்

இதைத்தொடர்ந்து பணியில் கவனக்குறைவாகவும், மெத்தனப் போக்குடனும் இருந்ததாக தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் ஸ்ரீதேவி, மனோகரன், சிவக்குமார் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து ஆவின் பொதுமேலாளர் பி.ராமநாதன் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து தினமும் பாலின் தரம் சரியான முறையில் இருக்க வேண்டும் என்று அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.


Next Story