வெவ்வேறு சம்பவங்களில் பாதிரியார் உள்பட 3 பேர் சாவு


வெவ்வேறு சம்பவங்களில் பாதிரியார் உள்பட 3 பேர் சாவு
x

வெவ்வேறு சம்பவங்களில் பாதிரியார் உள்பட 3 பேர் இறந்தனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் பாதிரியார் உள்பட 3 பேர் இறந்தனர்.

டெய்லர்

சென்னை தண்டையார்பேட்டை, நாவலர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 44). இவர் மணப்பாறையை அடுத்த அனுக்கானத்தம் பகுதியில் டெய்லராக வேலைபார்த்து வந்தார். இவர் டீ குடிப்பதற்காக ஆசாத்ரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, அந்த வழியாக வந்த கார் மூர்த்தி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயிண்டர் சாவு

திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி குரூஸ் (57). பெயிண்டர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் குரூஸ் வீட்டு அருகில் உள்ள சாக்கடையில் விழுந்து இறந்து கிடந்தார். தகவல் அறிந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிரியார் திடீர் சாவு

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சேர்ந்தவர் எசக்கியாள் கிருபை ராஜ் (35). இவர் வால்பாறை சி.எஸ்.ஐ. ஆலயத்தில் பாதிரியாராக இருந்தார். சம்பவத்தன்று இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டு வயலூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றார்.

அப்போது, அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story