சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி பகுதியில் டீக்கடையை சூறையாடிய பெண் உள்பட 3 பேர் கைது


சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி பகுதியில்  டீக்கடையை சூறையாடிய  பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2023 12:45 AM IST (Updated: 14 Sept 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி பகுதியில் டீக்கடையை சூறையாடிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை


சிவகங்கையை அடுத்துள்ள நாட்டரசன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சையது முகமது.

இவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வாசலில் ஊராட்சிக்கு சொந்தமான கடையை ஏலம் எடுத்து டீக்கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நோயாளிகளுக்காக சுடுதண்ணீரை இலவசமாக வழங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கடையில் அவரது மாமனார் நாகூர் பிச்சை, கடையில் வேலை செய்யும் செல்வம், லட்சுமணன் ஆகியோர் இருந்தனர்.

அப்போது அருகில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்த மாதேஸ்வரி (வயது 47) என்ற பெண், சுடுதண்ணீர் கேட்டு அடிக்கடி கடைக்கு வந்து சென்றார். இதனால் சையது முகமது அடிக்கடி இதுபோல் சுடு தண்ணீர் கேட்டு வரக்கூடாது என கூறினாராம். இதனால் அவருடன், மாதேஸ்வரி வாக்குவாதம் செய்துவிட்டு சென்றார்.

பின்னர் சிறிது நேரத்தில் கடைக்கு வந்த சிலர் நாகூர் பிச்சையை தாக்கி கடையில் இருந்த பொருட்களை நொறுக்கி சூறையாடினராம். இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் அப்பகுதியில் பரவின.

இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் சப்-இ்ன்ஸ்பெக்டர் சண்முகபிரியா விசாரணை நடத்தி மாதேஸ்வரி, அவருடைய மகன் அருண்குமார் (27), தமிழரசன் (35), செந்தில்குமார் (29) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். அருண்குமாரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story