இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்-மாமியார் உள்பட 3 பேர் கைது


இளம் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்-மாமியார் உள்பட 3 பேர் கைது
x

சிவகங்கை அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்-மாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை


சிவகங்கை அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர்-மாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூக்கில் பிணம்

சிவகங்கையை அடுத்துள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் இவரது மகள் சந்தியா(வயது 24). இவருக்கும், மேட்டுப்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் (38) என்பவருக்கும் திருமணமாகி 4 ஆண்டு ஆகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சோமசுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தியாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சந்தியா நேற்று காலை இடையமேலூர் கிராமத்தின் சாலையோர புதர் பகுதிக்குள் மர்மமான முறையில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

3 பேர் கைது

இதுகுறித்து சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு சிபிசாய் சவுந்தர்யன், தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியாவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் சோமசுந்தரம்(38), அவரது அண்ணன் நகாராஜ்(42), மாமியார் சுந்தரவள்ளி(65) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story